serial
செல்லம்மா தொடர்இன்ஸ்டாகிராம்

நிறைவடைகிறது பிரபலத் தொடர்: கண்ணீருடன் விடைபெற்ற நடிகை!

செல்லம்மா தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
Published on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலத் தொடர் செல்லம்மா. இத்தொடரில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இத்தொடர் கடந்த மே 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் செல்லம்மா தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் நடிகை அன்ஷிதா சக நடிகர்களை பிரிவதை எண்ணி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது.

மக்கள் மத்தியில் பிரபலமைடைந்த செல்லம்மா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது இத்தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

serial
இந்திரா தொடர் நடிகைக்கு திருமணம்!

திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இந்த நேரத்தில் கண்மணி அன்புடன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த புதிய தொடரில் நவீன் வெற்றி மற்றும் துஷிதா(கிரேசி தங்கவேல்) ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com