மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மணிப்பூர்: இரு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி!

சிஆர்பிஎஃப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு.

News image

துப்பாக்கிச் சூடு (கோப்புப்பட,) - Din

Updated On :10 செப்டம்பர் 2024, 8:19 am

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய இரு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயது பெண் ஒருவர் பலியானதாக காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காங்போக்பி அருகே உள்ள கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் இருந்த சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், அச்சமடைந்த மக்கள் அருகில் உள்ள காடுகளில் தஞ்சமடைந்தனர்.

பலியான பெண் நெம்ஞாகோல் லுங்டிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் சுரந்த்பூர் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குண்டுகள் வெடித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அன்றிரவு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.