புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ .
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ .

புதுச்சேரியில் மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்து: வைரலாகும் அதிர்ச்சி விடியோ

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்த்து விபத்துகுள்ளானது.
Published on

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்த்து விபத்துகுள்ளானதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சிசிடிவி விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் இருந்து மாலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு காமராஜர் சாலை வழியாக ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்பொழுது 45 ரோடு சிக்னலில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ .
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ரூ.1,57,000 சம்பளத்தில் ஐடிபிஐ வங்கியில் வேலை!
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. குழந்தைகள் காயமடைந்தனர்.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. குழந்தைகள் காயமடைந்தனர்.

தில், நிலை தடுமாறி ஆட்டோ மாணவர்களுடன் கவிழ்ந்தது. இதில் மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனுடைய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com