உ.பி.: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!

14 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர்.
up
மீட்புப் பணியில் ஈடுபடும் பேரிடர் மீட்புப் பணியினர்.படம்: ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலனி பகுதியில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் 15 பேர் சிக்கிய நிலையில், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மழைப் பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக உத்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளப் எக்ஸ் தளப் பதிவில், “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 30 கால்நடைகள் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட 30 பேருக்கும், 3,056 வீடுகள் சேதமடைந்தது தொடர்பாகவும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com