
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே வியாழக்கிழமை காலை தனியார் பள்ளி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூர் பகுதியில் வியாழக்கிழமை காலை தனியார் பள்ளி பேருந்து ஒன்று 32 மாணவர்களை ஏற்றுக்கொண்டு சென்றது. குறுகிய சாலை பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் மாணவா்களின் அலறல் சப்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் பேருந்தில் இருந்து மாணவா்களை மீட்டனா். விபத்தில், நெற்றியில் காயமடைந்த ஒரு குழந்தை மட்டும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மற்ற மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினா்.
நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். தனியார் பள்ளி வாகனங்கள் குறுகிய சாலையில் வீட்டிற்கு சென்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.