பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடக்கம்!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

Published On :

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதி பெற்றதாகும். 15 நாள்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோயில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டு. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோயில் வளாத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவானது ஏப்ரல் 29 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றம், மே 6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், மே 9 ஆம் தேதி மீனாட்சி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியது.

இதேபோன்று கள்ளழகர் கோயிலை பொறுத்தமட்டில் மே 10 ஆம் தேதி கள்ளழகர் புறப்பாடு, மே 11 ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை, மே 12 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.