
அரக்கோணம்: அரக்கோணத்தில் போதையூட்டக்கூடிய மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு பேரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த போலீசார், அவா்களிடமிருந்த ரூ. 21,000 மதிப்புள்ள மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் நகரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர்.
அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் நடந்துச் சென்ற இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஆற்காடு அண்ணா நகரைச் சேர்ந்த ஜெய்கணேஷ்(21), ராணிப்பேட்டை சிப்காட்டைச் சேர்ந்த ஹரிஷ் குமார்(22)) என்பதும், அவர்களது பைகளை சோதனையிட்ட போது ரூ. 21,000 மதிப்புள்ள 1080 போதையூட்டக்கூடிய மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.