தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற உத்தரவிட்ட அமெரிக்கா!

தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற அமெரிக்கா அரசு உத்தரவிட்டதைப் பற்றி...
அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதியானது 7 நாளுக்குள் காலவதியாகிவிடும் எனவும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் கடந்த ஏப்.3 அன்று அமெரிக்க அரசினால் மின்னஞ்சல் மூலம் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவினால், அங்குள்ள உக்ரைன் சமூகத்தினர் இடையில் பெரும் பரபரப்பு நிலவிய சூழலில் நிர்வாகக் கோளாறு காரணமாக இந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் அவ்வாறு எந்தவொரு உத்தரவும் அவர்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை எனவும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் திரிசியா மெக்லாஃப்லின் கூறுகையில், நிர்வாகக் கோளாறினால் இந்த உத்தரவானது உக்ரைன் அகதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்து உடனடியாக அவர்களது அனுமதியின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மற்றொரு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் உக்ரைன் அகதிகள் அந்நாட்டில் வசிக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

இதைப்பற்றி, அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களுடன் பேசுகையில், அமெரிக்காவில் வாழும் 2,40,000 உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைப் பற்றி தற்போது அரசு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை, ஆனால் அதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: ஆப்கன் முதியவருக்கு 140 வயதா? தலிபான் அரசு விசாரணை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com