படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

இந்தோனேசியாவில் பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம்! அதிபர் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க இந்தோனேசியா அரசு முன்வந்துள்ளது....

இந்தோனேசியா அதிபர் - ஏபி

Published On :

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான காஸா மீதான போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், காஸாவிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும், ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பங்களை இழந்தும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்கவும் அவர்கள் விரும்பினால் காஸாவிலிருந்து அவர்களை இந்தோனேசியாவுக்கு அழைத்து வருவதற்கு தங்களது அரசு விமானங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் மட்டுமே வழங்கப்படும் என்றும் இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகளுடன் ஆலோசிக்க இந்தோனேசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிபர் சுபியாந்தோ கூறுகையில், காஸாவில் படுகாயமடைந்த பாலஸ்தீனர்களில் முதல் குழுவாக 1000 பேர் தனி விமானங்கள் மூலம் இந்தோனேசியாவிற்கு அழைத்து வர அரசு தயாராகவுள்ளதாகவும், அவர்களது காயங்கள் குணமாகி காஸாவிற்கு திரும்பச் செல்ல பாதுகாப்பான சூழல் உருவான பின் தங்களது தாயகத்துக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, துருக்கி, எகிப்து, கத்தார், ஜோர்டான் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் சுபியாந்தோ அந்நாட்டு தலைவர்களுடன் பாலஸ்தீன மக்களுக்கான இந்தத் திட்டத்தைப் பற்றி ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதில், சில நாடுகளின் அரசுகள் மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களை தங்கள் நாட்டுக்குள் ஏற்கனவே அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.