நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்! தொடருமா பின் அதிர்வுகள்?

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

News image

மார்ச்.28 ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சிதைந்துள்ள கட்டடங்கள்.

Updated On :17 ஏப்ரல் 2025, 2:23 pm IST

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (ஏப்.17) மதியம் 12.02 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய நிலநடுக்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது ஆழமற்ற நிலநடுக்கமாகக் கருதப்படுவதினால் இதன் பின் அதிர்வுகள் ஏதேனும் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்கள் நிலபரப்புக்கு மிக அருகில் ஏற்படுவதினால் அதனால் அதிக பாதிப்புகள் உண்டாகக் கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஏப்.16 ஆம் தேதியன்று மியான்மரில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் மறுநாளே (ஏப்.17) மற்றொரு நிலநடுக்கம் பதிவானது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கதினால் லட்சக்கணக்கான கட்டடங்கள் சிதைந்து ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.