
பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட சோதனை ஓட்டம் இம்மாத(ஏப்ரல்) இறுதியில் நடைபெற உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில் சென்னையில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை மொத்தம் 9 கி.மீ. தூரத்துக்கு 2 ஆம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 20ல் 2.5 கி.மீ. தொலைவுக்கு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இந்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.