புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்திப்பில்,
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 9 நாள்களுக்குப் பிறகு, அதனை துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் தற்போது விமர்சித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் துணைக் குடியரசுத் தலைவரை பேச வைத்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக வக்ஃப் சட்டத் திருத்த நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மீது இப்படியொரு விமர்சனத்தை வைக்கிறார்கள். இன்னும் முழுமையான தீர்ப்பு வரவில்லை.
நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் கூட அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். இது ஜனநாயக நாடு.
பொதுப்பட்டியல் முடிவுகளை ஆலோசிக்க வேண்டாமா?
மத்திய அரசு தங்களின் கட்டுப்பட்டிலுள்ள அம்சங்களில் முடிவெடுப்பதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. கல்வியில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டாமா? எங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டாமா? என்றார் ரகுபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! - முன்னாள் அமைச்சர் ரகுபதி பேச்சு!

பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்

திமுக தான் முதலிடம்; இரண்டாவது இடத்துக்குத் தான் போட்டி: அமைச்சர் எஸ். ரகுபதி

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வங்கி: அமைச்சர் ரகுபதி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



