பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.எஸ். சந்திரமௌலி உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய
முதல்வர் நாயுடு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.எஸ். சந்திரமௌலி உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய முதல்வர் நாயுடு.
Published on
Updated on
2 min read

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளிகளில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் தாக்குதலில் குறைந்தது 26 போ் கொல்லப்பட்டனா். இதில் பெரும்பாானோா் சுற்றுலாப் பயணிகள் ஆவா்.

தாக்குதலில் ஆந்திரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.எஸ். சந்திரமௌலி மற்றும் கவாலியைச் சேர்ந்த ஐ.டி. நிபுணர் மதுசூதன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.எஸ். சந்திரமௌலி உடல் புதன்கிழமை இரவு விசாகப்பட்டினம் விமான நிலையம் வந்தடைந்தது.

விமான நிலையம் வந்த சந்திரமௌலியின் உடலுக்கு முதல்வர் நாயுடு மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மத்திய அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு, மாநில உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா மற்றும் விசாகப்பட்டினம் எம்.பி. ஸ்ரீபரத் ஆகியோருடன், முதல்வர் இறுதிச் சடங்கு வாகனத்துடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்தத் தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயல். இது தனிநபர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் அமைதியின் மீதான தாக்குதல் என்று நாயுடு கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சந்திரமௌலியின் குடும்பத்தினருக்கு முதல்வர் நாயுடு ஆறுதல் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சந்திரமௌலியின் குடும்பத்தினருக்கு முதல்வர் நாயுடு ஆறுதல் கூறினார்.

மேலும், இது ஒற்றுமைக்கான நேரம். நாட்டைப் பாதுகாப்பதில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தவர், நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமான ஆந்திரம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் நாயுடு உறுதியளித்தார்.

2047 இல் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்

"2047-க்குள் இந்தியா உலகளவில் வளர்ந்த நாடாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் நமது முன்னேற்றத்தைத் தடம் புரளச் செய்யும் சக்திகளின் அவநம்பிக்கையான முயற்சிகள்" என்றும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் முறியடிக்க ஒட்டுமொத்த தேசமும் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றுபட்டுள்ளது என்று முதல்வர் நாயுடு கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

பஹல்காமில் கொல்லப்பட்ட ஆந்திரத்தை சேர்ந்த சந்திரமௌலி மற்றும் கவாலியைச் சேர்ந்த ஐ.டி. நிபுணர் மதுசூதன் ஆகிய இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com