ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதைப் பற்றி...

புது தில்லி காவல் துறை உயர் அதிகாரி ஹர்ஷவர்தன்

Published On :

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறிய வங்கதேசத்தினரை பிடிக்க தில்லி காவல் துறையினர் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 21 வங்கதேசத்தினர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தில்லி காவல் துறை உயர் அதிகாரி எம்.ஹர்ஷவர்தன் கூறியதாவது, 21 வங்கதேசத்தினரில் 18 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.

கைது செய்யப்பட்ட 3 பேரின் மீதும் பாஹர்கஞ்சு காவல் துறையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டு, இந்திய ஆவணங்கள் மற்றும் வங்கதேசத்தின் கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் இருவர் 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவினுள் சட்டவிரோதமாக குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு உதவி செய்த தரகரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.