12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!

விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் விடியோ வெளியானது குறித்து...

Dinamani

Published On :

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் ’சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் மூலம் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாடகர் அறிவு எழுதிய ’சவதீகா’ பாடலை ஆந்தோனி தாசன் பாடியுள்ளார். முன்னதாக, இப்பாடல் யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் வருகின்ற பிப்.6 க்கு படக்குழுவினரால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பாடலின் ரீலோடட் வெர்ஷன் விடியோ இன்று (பிப்.1) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடியோவில் பாடகர் அந்தோனி தாசனும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இணைந்து ஆடி பாடி வைப் செய்யும் விடியோவாக சித்தார்த் விஸ்வனாத் இயக்கத்தில் உருவாக்க்கப்பட்டுள்ளது.

இத்துடன், பாடல் வெளியாகிய 2 மணிநேரத்தில் சுமார் 1.5 லட்சம் பார்வைகளை இந்த விடியோ கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.