சூர்யாவின் சீன்: அடுத்த பாடல் வெளியீடு!
சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியானது.
சூர்யா
சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியானது.
நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். மலையாளத்தில் ஆவேசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வெளியான ‘ஆத்தி இவ யார்ரா’ என்கிற முதல் பாடல் கவனம் பெற்ற நிலையில், அடுத்த பாடலான ’ஏரோப்ளேன்’ இன்று வெளியானது. ராஜ்பிரியன் எழுதிய இப்பாடலை கானா பாலா பாடியுள்ளார்.
சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Summary
The next song from the movie Scene starring Suriya has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


