25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

நிலத் தகராறில் துப்பாக்கியால் சுட்டவர் கைது! விடியோ வைரல்!

ஜம்முவில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2025, 12:14 pm

DIN

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் தொடர்பாக ரேகா தேவி என்பவருக்கும் பிரிஜ் ராஜ் சிங் என்பவருக்கும் மத்தியில் தகராறு நடைபெற்றுள்ளது.

அந்த தகராறின்போது பிரிஜ் ராஜ் சிங் அவரது துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார். இதனால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பான விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் மீது ஆயுத சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகள் 2 பேர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய பிரிஜ் ராஜ் சிங் அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளரான பிரிஜ் பூஷன் சிங் ஜம்வால் என்பவரது சகோதரர் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.