24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னையில் விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :4 பிப்ரவரி 2025, 8:28 am IST

சென்னையில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், விமானங்கள் மற்றும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பதுகூட தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு கொட்டுகிறது.

சென்னையில் நிலவும் அடர்ந்த பனிமூட்டத்தால், புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கமான அட்டவணையைவிட 7 - 15 நிமிட இடைவெளியில் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

அதேபோல், பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை செல்லும் செல்லும் 5 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னையில் சில விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டுள்ளன.

குவைத்தில் இருந்து 148 பயணிகளிடன் வந்த விமானம் சென்னையில் தரையிரங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து வருகிறது.

இதனிடையே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

சென்னையில் அதிகாலை அடர் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், நடைப்பயிற்சி செல்வோர், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.