பெரியார் அறிவுலகம்: அதிகாரி, அரசியல்வாதி யாரும் தப்பிக்க முடியாது - ராஜ்மோகன்ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தேவின் அக்கா டீசர்!

அக்கா வெப் தொடரின் டீசர் குறித்து...

Updated On :

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் இணைந்து நடிக்கும் அக்கா வெப் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.

இவர் நாயகியாக நடித்த ரகு தாத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் புதிய வெப் தொடரில் நடிக்கின்றனர். இந்த வெப் தொடருக்கு அக்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திரில்லர் பாணியில் எடுக்கப்படும் இந்த வெப் தொடரை ஒய்ஆர்எஃப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தாண்டு வெளியாகவுள்ளது.

அக்கா இணையத் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.