பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கே.பி. செளத்ரி - கோப்புப் படம்

Published On :

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தனது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 44.

கோவாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடலைக் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான கே.பி. செளத்ரி, ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் (தெலுங்கு) தயாரிப்பாளராவார். இவர் கோவாவின் சியோலிம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி அவரின் உடலை மீட்டதாக காவல் துறை கண்காணிப்பாளர் அக்‌ஷத் கெளஷல் தெரிவித்துள்ளார்.

காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செளத்ரி வீட்டிற்கு விரைந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவாவில் நீண்ட நாள்கள் தங்கியிருந்த கே.பி. செளத்ரி, அங்கு கேளிக்கை விடுதி ஒன்றைத் திறந்ததாகவும், அதில் திரைத் துறை பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையதாக கே.பி. செளத்ரியை சைத்ராபாத் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.