தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நியூயார்க்கில் ரொனால்டோவின் 12 அடி உயர வெண்கல சிலை!

நியூயார்க்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 12 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் திறக்கப்பட்டுள்ள ரொனால்டோவின் 12 அடி உயர வெண்கல சிலை

Updated On :8 பிப்ரவரி 2025, 7:12 am

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த பிப். 5 அன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவரது பிறந்த நாளன்று (பிப்.5) நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் ரொனால்டோவின் 12 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலையானது அவரது ரசிகர்களால் திறக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கோல் அடித்த பின்னர் அதனை கொண்டாடும் விதமாக ரொனால்டோ பின்னப்பற்றி வரும் ‘சியூ’ எனும் செய்கையை குறிப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இத்தாலிய கலைஞரான செர்ஜியோ ஃபுர்னாரி என்பவர் உருவாக்கியுள்ளார்.

முன்னதாக, போர்த்துல நாட்டின் தேசிய அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கால்பந்து உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலோன் தி’ஓர் விருதை இவர் 5 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.