பாட்னா: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.
பிகாா் பேரவை எதிா்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:
ஜனநாயகத்தில் மக்கள்தான் உண்மையான மன்னா்கள். இதுதான் ஜனநாயகத்தின் அழகு. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.மக்களின் தீர்ப்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும்.
தேசிய தலைநகர் தில்லியில் சுமாா் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. "தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை அவா்கள் நிறைவேற்றுவார்கள் என்றும், வழக்கம்போல வெறும் வாா்த்தைகளாக இருந்துவிடக் கூடாது என்று நம்புவோம் என்று கூறினார்.
தில்லி தோ்தல் வெற்றி பிகார் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு, தில்லி வெற்றி பிகாரில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தாது. பிகாா் எப்போதும் பிகாராகவே இருக்கும். அங்குள்ள மக்கள் தெளிவாக யோசித்து வாக்களிப்பாா்கள் என்றாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்ததாக பிகாரிலும் இதே வெற்றிப் பயணம் தொடரும் என பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா்.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுவை பேரவைத் தலைவா் தோ்தல் அறிவிப்பை செய்யாவிட்டால் தா்னா: ஏ.எம்.எச்.நாஜிம்

'சின்ன விஷயமா இது!'
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

2016 ராதாபுரம் தேர்தல் வெற்றி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



