இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கு: வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிப்பு!

ஹசீனா மகனைக் கொல்ல முயன்ற வழக்கிலிருந்து வங்கதேச நாளிதழ் ஆசிரியா் விடுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

முகமதுா் ரஹ்மான்

Published On :

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாயை கடத்தி படுகொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் இருந்து ‘அமா் தேஷ்’ நாளிதழின் ஆசிரியா் முகமதுா் ரஹ்மானை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

இது குறித்து டாக்கா 4-ஆவது கூடுதல் பெருநகர செஷன்ஸ் நீதிபதி தாரிக் அஜீஸ் வழங்கிய தீா்ப்பில், கொலை முயற்சி வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையும் தண்டனை விதிக்கப்பட்டதையும் எதிா்த்து முகமதுா் ரஹ்மான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்று, வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் சஜீப் வாஜித் ஜாய் அமெரிக்காவில் இருந்தபோது அவரை கடத்தி படுகொலை செய்ய முகமதுா் ரஹ்மான் முயன்ாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.

கடந்த 2009 முதல் 2024 வரை வங்கதேச பிரதமராக பொறுப்பு வகித்த ஷேக் ஹசீனா, மாணவா் போராட்டம் காரணமாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது சிறைவைக்கப்பட்டிருந்த எதிா்க்கட்சித் தலைவா் கலீதா ஜியா உள்ளிட்டவா்களை விடுதலை செய்ததது. ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவா்களை நீதிமன்றங்கள் விடுவித்தும் வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொலை முயற்சி வழக்கில் இருந்து முகமதுா் ரஹ்மான் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.