

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். இப்பயணத்தை முடித்துகொண்டு அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.
அமெரிக்க பயணத்துக்கு முன்பாக, பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்திய-பிரான்ஸ் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இரு தலைவா்களும் உரையாற்ற உள்ளனர். மேலும், மாா்சே நகரில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை இருவரும் திறந்துவைக்க உள்ளனர்
இதையும் படிக்க: தில்லியில் அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்தார் இபிஎஸ்!
பிரான்ஸ் பயணத்தை முடித்துகொண்டு, அங்கிருந்து பிப்ரவரி 12-ல் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியா்கள் சில நாள்களுக்கு முன் நாடுகடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டிரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.