ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2025, 4:15 pm

DIN

குஜராத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி தங்கியிருந்த 16 வங்கதேசத்தவா்கள் நாடுகடத்தப்பட்டதாக குஜராத் காவல் துறையினா் தெரிவித்தனா். அடுத்த மாதம் மேலும் 36 வங்கதேசத்தவா் நாடு கடத்தப்படவுள்ளனா் என்றும் அவா்கள் கூறினா்.

வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அண்மையில் வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டத்தின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்குள்ள மத அடிப்படைவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்கள் மூலம் அசம்பாவித சம்பவங்களை அந்த அடிப்படைவாத அமைப்புகள் நிகழ்த்திவிடக் கூடாது என்பதால் நாடு முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தையொட்டிய மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தவா்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில், வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள மாநிலங்களிலும் வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் அதிகம் ஊடுருவியுள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக குடியேறியவா்களை கண்டறியும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா். அதன்படி 36 சிறாா்கள், பெண்கள் உள்பட வங்கதேசத்தவா் அகமதாபாதின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனா். இவா்கள் பாலியல் தொழில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனா். மேலும், இந்திய குடிமக்களாகக் காட்டிக் கொள்ள போலியான ஆவணங்களையும் பெற்றுள்ளனா்.

உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அவா்கள் வங்கதேசத்தவா்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களை ஏற்றுக் கொள்ள சம்மதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.