சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொலிவியா: பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி!

பொலிவியா நாட்டில் பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியானதைப் பற்றி...

News image
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
Updated On :18 பிப்ரவரி 2025, 7:28 am

DIN

 மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து நொறுங்கியதில் 30 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: படோசி நகருக்கும் ஓருரோ நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து, யோகல்லா பகுதிக்கு அருகே 800 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 30 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்

விபத்தில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது அந்தப் பேருந்தில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

சுமாா் 1.2 லட்சம் போ் வசிக்கும் பொலிவியாவில், சாலை விபத்தில் சிக்கி ஆண்டுதோறும் 1,400 போ் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.