மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும்: ஹனுமந்தராவ்

மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும், ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மருத்துவக்கல்லூரி நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்படும்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.
கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.
Published on
Updated on
2 min read

மதுரை: மதுரை எய்ம்ஸ் முதல்கட்ட பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும், ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மருத்துவக்கல்லூரி நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்படும் என செயல் இயக்குநர் ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹனுமந்தராவ் கூறியுள்ளதாவது:

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இது தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில மக்களுக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான நம்பிக்கையை அளிக்கிறது.

மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனைக் கட்டப்பட்டு வருகிறது. மே 22, 2024 இல் தொடங்கப்பட்ட இந்த கட்டுமானத் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவடையும்.

முதற்கட்டமாக கல்வி வளாகம், வெளிநோயாளர்களின் மருத்துவ சேவைகள், மாணவ,மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டடங்கள் போன்றவை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடியும், முதற்கட்ட கட்டுமானத்தில் 24 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முழு கட்டுமானமும் பிப்ரவரி 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, ஒட்டுமொத்தமாக கட்டுமானத்தில் 14.5 சதவிகித பணிகள் முடிந்துள்ளது. நீடித்த நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, உலகளாவிய தரநிலைக்கேற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்லப்பட்டு வருகின்றன.

மதுரை எய்ம்ஸ் வளாகம் நோயாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதா வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் 900 படுக்கைகளில் 150 படுக்கைகள் பிரத்யோகமாக தொற்று நோய்க்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்ப வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவை அடங்கியுள்ளன. இது மாணவர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்கும் ஒரு முழுமையான தன்னிறைவை உறுதி செய்கிறது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணிச்சேர்க்கையும் படிப்படியாக நடந்து வருவதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையின்மையையும் மற்றும் கல்வித்தரத்தையும் உறுதி செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எய்ம்ஸில் சேரும் மாணவா்கள்,ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக 2021-22 கல்வியாண்டு முதல் எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்க்கப்பட்டு அவா்களுக்கான வகுப்புகள் தடங்கலின்றி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.

மதுரை எய்ம்ஸ் மற்றொரு சுகாதார மையம் மட்டுமல்ல. இது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களுக்கு மேம்பட்ட பராமரிப்பு, மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வி வழங்க வேண்டுமென உறுதிக் கொண்டுள்ளது. நீடித்த நிலையான முன்னேற்றம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன், இந்த நிறுவனம் பிராந்தியத்தின் சுகாதார நிலப்பரப்பாக மாற்றத் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com