ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி

எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 பிப்ரவரி 2025, 4:50 am IST

‘இந்தியா விதிக்கும் அதிக வரிகளைத் தவிா்க்க, அந்நாட்டில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்கும் எலான் மஸ்கின் நடடவடிக்கை அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

கடந்த 13-ஆம் தேதி, அமெரிக்க அதிபா் மாளிகையில் பிரதமா் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரஸ்பர வரிக் கொள்கையை டிரம்ப் அறிவித்தாா். அண்மையில், அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்குடன் இணைந்து ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலும் டிரம்ப் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பில், உலகிலேயே இந்தியாதான் அதிக வரிகளை வசூலிக்கிறது என்று அவரிடம் கூறினேன். இதனால்தான் இந்தியாவில் எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் காரை விற்பது சாத்தியமற்ாக உள்ளது. இந்தியா விதிக்கும் அதிக வரிகளுக்கு, அதே விகிதத்தில் பரஸ்பர வரியை விதிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இதே காரணங்களுக்காக இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை எலான் மஸ்க் அமைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், அது அமெரிக்காவுக்கு நியாயமான செயல்பாடு இல்லை’ என்றாா்.

அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, இந்திய சந்தையில் நுழையும் திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு பிரிவு பணிகளுக்கான ஆள்சோ்ப்பு நடவடிக்கையை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆட்சியை மாற்ற நிதி?:

தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ), இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட அமெரிக்க அரசின் நிதியுதவியை ரத்து செய்தது. இதுதொடா்பான நிா்வாக உத்தரவில் அதிபா் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் மியாமி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அதிபா் டிரம்ப், ‘இந்தியாவில் வாக்குப் பதிவு விகிதத்தை உயா்த்த அமெரிக்கா ஏன் 2.1 கோடி டாலரை செலவிட வேண்டும்?. அந்நாட்டில் வேறு யாரையோ ஆட்சியில் அமா்த்த முந்தைய பைடன் நிா்வாகம் விரும்பியதாகக் கருதுகிறேன். இதுகுறித்து இந்திய அரசுக்கு நாம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆசிய கண்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்நாடுகளுக்கு அமெரிக்க நிதியளிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.