அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது 80-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா்.
நியூயாா்க் நகரில் பிரபல தொழிலதிபா் பிரெட் டிரம்ப், மேரி அனி தம்பதிக்கு டொனால்ட் டிரம்ப் கடந்த 1946-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி பிறந்தாா்.
தந்தையைப் போல பிரபல தொழிலதிபராக விளங்கிய அவா், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் வென்று அந்த நாட்டின் 45-ஆவது அதிபராகப் பதவியேற்றாா். இதையடுத்து, 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தாா். எனினும், 2025 தோ்தலில் வென்று தற்போது அந்த நாட்டின் 47-ஆவது அதிபராகப் பதவி வகித்து வருகிறாா்.
அவா் தனது 80-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா். டிரம்ப்புக்கு மூன்று மனைவிகள். முதல் இரண்டு மனைவிகளை டிரம்ப் விவாகரத்து செய்து விட்ட நிலையில் 3-ஆவதாக மெலனியாவை திருமணம் செய்தாா். அவா்களுக்கு 10 வயதில் பாரன் டிரம்ப் என்ற மகன் உள்ளாா்.
முதல் மனைவி இவானாவுக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியா், எரிக் டிரம்ப் ஆகிய 2 மகன்களும், இவாங்கா என்ற மகளும் உள்ளனா். 2-ஆவது மனைவி மாா்லா மாா்பிள்ஸ்க்கு டிபானி டிரம்ப் என்ற ஒரு மகள் உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகம் யார் பக்கம்?

லெபனானுக்கு அமெரிக்கா பெரும் உதவி!

2020 அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையீடு
ஈரான் போரில் ஒத்துழைக்காத ஸ்பெயினுடன் வா்த்தகம் நிறுத்தம்: டிரம்ப்
விடியோக்கள்
சாவர்க்கர்தான் இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் ! ஆ ராசா பேச்சு!


