
மகாராஷ்டிர மாநிலத்தின் கடலில் மூழ்கிய சுற்றுலா பயணிகளில் 2 இளைஞர்கள் பலியாகினர்.
சிந்துதுர்க் மாவட்டத்தின் மல்வான் பகுதியிலுள்ள பிரபல சுற்றுலாத் தளமான தர்கலி கடற்கரையில், நேற்று (பிப்.22) புணேவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, கடலில் நீந்தி விளையாடிய அவர்கள் காலை 11.30 மணியளவில் அவர்கள் நீந்தி அந்த கடலின் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நீந்த முடியாமல் உயிருக்கு போராடிய 3 பேரை அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுள்ளனர். ஆனால், கடலுக்குள் மூழ்கிய சுபம் சுசில் சோனாவானே (வயது 22) மற்றும் ரோஹித் பாலாசாஹேப் சோலி (21) ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர்.
இதையும் படிக்க: ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
மேலும், மீட்கப்பட்டவர்களில் ஒருவரான ஓம்கர் போசாலே (23) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவயிடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி உடற் கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓம்கர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை அபாயக் கட்டத்திலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.