டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

பாரிஸில் ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தைக் கொல்லப்பட்டதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் அமெரிக்க பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸிலுள்ள ஹோட்டலின் இரண்டாவது தளத்திலுள்ள ஜன்னலின் வழியாக பச்சிளம் குழந்தை ஒன்று நேற்று (பிப்.24) காலை வீசப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே பலியாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவிற்கு இளம் குழுவினரோடு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள 18 வயதுடைய பெண் ஒருவர் தனது ஹோட்டல் அறையில் குழந்தையை பெற்றெடுத்து அங்குள்ள ஜன்னல் வழியாகக் வீசியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைப் பெற்ற பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாரிஸ் காவல் துறையினரால் அந்த பெண் தற்போது காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரிக்கும் பணி குழந்தைகள் பாதுகாப்பு காவல் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இது கர்ப்பம் மறுப்பாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு பெண் பிரசவம் வரை தனது கர்ப்பத்தைப் பற்றி அறியாமலோ அல்லது அதனை முழுவதுமாக நிராகரித்தோ இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.