தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை(ஜன.3) தொடங்கியது.

News image

மாநாட்டில் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.

Updated On :3 ஜனவரி 2025, 9:10 am

DIN

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை(ஜன.3) தொடங்கியது.

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி வருகிற 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கினைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்து பேசினார்.

மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ,வாசுகி, டி.கே. ரங்கராஜன், எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், எம் எல்ஏக்கள் நாகை மாலி , சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகிறார். இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது.

விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டப வளாகப் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பங்கேற்கும் பேரணி தொடங்கி, காட்பாடி மேம்பாலம், மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்பு, மாவட்ட ஆட்சியரகப் பகுதி, புதிய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் நகராட்சித் திடலை அடைகிறது.

இதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், பேபி, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசுகின்றனா்.

இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலத் தலைவா்கள், மாநிலக் குழு உறுப்பினா்கள், மாவட்டங்களிலிருந்து கட்சியினர் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மாநாட்டு அமர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.