ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

கோவையில் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரியில் இருந்து கசிந்து வரும் எரிவாயுவை தண்ணீரை பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் தீயணைப்புத் துறையினர்.

Published On :

கோவை: கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம் மாநிலம், கொச்சியில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது ஆக்சில் துண்டாகி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்ததில் சேதம் ஏற்பட்டு எரிவாயு கசிந்தது.

இதையடுத்து லாரியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

எரிவாயு கசியும் டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீயணைப்புத் துறை வீரர்கள்.

எரிவாயு கசியும் டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் தீயணைப்புத் துறை வீரர்கள்.

போக்குவரத்து மாற்றம்

காவல்துறையினர் மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிவதற்கு கூடுதல் நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு முழுவதும் வெளியேற்றபட்டாலோ அல்லது முழுவதும் தண்ணீரில் கலக்கப்பட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில், விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு தொடர்ந்து வெளியேறி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(ஜன.3)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்துள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் எரிவாயு நிறுவன பொறியாளர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் நல்வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான டேங்கரை அப்புறப்படுத்துவதற்காக கிரேன் போன்ற வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.