குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மியான்மர்: சுதந்திர நாளை முன்னிட்டு 6,000 கைதிகள் விடுதலை!

மியான்மர் நாட்டில் சுதந்திர நாளை முன்னிட்டு 6,000 கைதிகள் விடுதலைச் செய்யப்படவுள்ளதைப் பற்றி..

News image

ராணுவ தளபதி மின் அவுங் ஹ்லைங் - Dinamani

Updated On :4 ஜனவரி 2025, 1:50 pm IST

மியான்மர் நாட்டின் 77வது சுதந்திர நாளை முன்னிட்டு 6,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்யப்போவதாக அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆவுங் சன் சூகி தலைமையிலான குடியரசு ஆட்சியை கலைத்து அந்நாட்டு ராணுவம் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில், பிரிட்டன் ராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலைப் பெற்ற 77வது சுதந்திரநாள் இன்று (ஜன.4) தலைநகர் நைப்பியிதோவில் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராணுவ அரசின் தளபதி மின் அவுங் ஹிலைங் 77வது சுதந்திர நாளை முன்னிட்டு மியான்மர் நாட்டு சிறைகளில் உள்ள 5,864 உள்ளூர் கைதிகளும், 180 வெளிநாட்டு கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும்,144 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையானது 15 ஆண்டுகள் சிறை தண்டனையாகக் குறைக்கப்படும் எனவும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குண்டு வெடிப்பு தடுப்பு சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை தவிர சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகள் அனைவரது தண்டனைக் காலமும் ஆறில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு சிறைகளிலிருந்து கைதிகளை விடுதலை செய்யும் பணி இன்று (ஜன.4) காலை முதல் துவங்கியுள்ள நிலையில் இந்த பணி இன்னும் சில நாள்கள் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதில் எத்தனை அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான தகவல்கள் வழங்கப்படவில்லை.

பொது விடுமுறை நாள்களில் மியான்மரில் சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக பின்பற்றப்பட்டு வருகிறது.

முன்னதாக, ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த 28,096 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், 21,499 பேர் அந்நாட்டு தற்போதுவரை சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

மேலும், அந்நாட்டு முன்னாள் அதிபர் ஆவுங் சன் சூகிக்கு ராணுவம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.