மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மகாராஷ்டிரம்: போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிரத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

News image
கோப்புப் படம்- Dinamani
Updated On :8 ஜனவரி 2025, 7:00 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளனர்.

தாணே மாவட்டத்தில் அம்மாநில காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.6 அன்று பிவாண்டி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தங்கியிருந்த அஹமது சகில் அஹமது மாலிக் (எ) சோனு என்பவரைச் சோதனை செய்ததில் அவர் 110 கிராம் அளவிலான எம்.டி எனும் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அந்த போதைப் பொருளை பிவாண்டி பகுதியைச் சேர்ந்த ரவீஷ் என்பவரிடம் இருந்து வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பானது ரூ.11.22 லட்சம் எனக் கூறப்படுகிறது.

பின்னர், அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய ரவீஷை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.