மாதாந்திர மின் கணக்கீடு எப்போது? செந்தில் பாலாஜி பதில்!

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்ட உடன் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை செயல்படுத்தப்படும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on
Updated on
1 min read

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிகள் நிறைவுற்ற பிறகு மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை செயல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மாதாந்திர மின் கணக்கீடு முறை எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது:

”ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை செயல்படுத்தப்படும்.

இதையும் படிக்க: கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மின் கட்டணம் மிகக் குறைவாக வசூலிக்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்று பேசினார்

திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மின்பயன்பாடு அளவீடு எடுத்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com