ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 3:08 pm IST

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கி, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.

கலைஞர் கருணாநிதியின் 97-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 3.6.2021 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விருதாளர்களுக்கு அரசு மூலமாக ரூ.40,00,000/- மதிப்பீட்டில் கனவு இல்லம் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது.

அதன்படி, 1994-ஆம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "விஷக்கன்னி" எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆ. செல்வராசு (எ) குறிஞ்சிவேலனுக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2பி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2004-ஆம் ஆண்டு கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "பருவம்" எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற ப. பாஸ்கரன் (எ) பாவண்ணனுக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 3பி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்" எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற சா. மணி (எ) நிர்மாலயாவுக்கு கோயம்புத்தூர், சிங்காநல்லூரில் இரண்டாவது அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் முதல் தளத்தில் 4-ஆம் எண் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டு ஒடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்" எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற பி.க.இராஜேந்திரன் (எ) இந்திரனுக்கு சோழிங்கநல்லூர் 1500 திட்டப்பகுதி – II, எட்டாவது தளத்தில் உள்ள மத்திய வருவாய் பிரிவு – II எண்.1/47 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "மீட்சி" எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கௌரி கிருபானந்தனுக்கு சோழிங்கநல்லூர் 1500 திட்டப்பகுதி, பிளாக் எண்-11, எண் 32 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “பொறுப்புமிக்க மனிதர்கள்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற க. பூரணச்சந்திரனுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சென்னை, பெசன்ட்நகர் கோட்டம்/பிரிவு – 2, சோழிங்கநல்லூர் (1500 எம்.எஸ்.பி) இரண்டாவது தளம், பிளாக் எண் 7, அடுக்குமாடி குடியிருப்பில் எண். 11 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “கசாக்கின் இதிகாசம்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற தி. மாரிமுத்து (எ) யூமா வாசுகிக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘4சி’ குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “திருடன் மணியன்பிள்ளை” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற சா. முகம்மது யூசுப் (குளச்சல் யூசப்) -க்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சென்னை, பெசன்ட்நகர் சோழிங்கநல்லூர் (1500 எம்.எஸ்.பி) கோட்டம்/பிரிவு – 1, இரண்டாவது தளம், அடுக்குமாடி குடியிருப்பில் எண். 6/10 குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “நிலம் பூத்து மலர்ந்த நாள்“ எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கே.வி. ஜெயஸ்ரீக்கு ஜெ.ஜெ. நகர் கோட்டம், 92-எச்.ஐ.ஜி. அம்பத்தூர் கட்டடத்தின் எச்.4/90 என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “கருங்குன்றம்” எனும் நூலிற்காக மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற கண்ணையன் தட்சணமூர்த்திக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத் திட்டப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ‘4ஏ’ குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்காணும் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய நாள் வழங்கினார்.

இந்திய அரசியலமைப்பின் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை வெளியிடுதல்

அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பிடும் வகையில் அவரது அனைத்து படைப்புகளையும் இன்றைய தமிழ் இளைஞர்கள் எளிமையாக வாசிக்கும் வகையில் புலவர் செந்தலை ந. கவுதமன், பேராசிரியர் வீ. அரசு, பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மேனாள் துணை இயக்குநர் அ. மதிவாணன் ஆகியோரின் நெறியாளுகையில் பிறமொழி கலப்பின்றி மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பதிப்பாக (1) இந்தியாவில் சாதிகள், (2) சூத்திரர்கள் யார்? பகுதி 1, (3) சூத்திரர்கள் யார்? பகுதி 2, (4) தீண்டப்படாதோர் – யார்? ஏன் தீண்டப்படாதோர் ஆயினர்?, (5) தீண்டப்படாதோர் அல்லது இந்தியச் சேரிகளின் குழந்தைகள், (6) தீண்டப்படாதோர் – தீண்டாமை/சமூகம், மதம் பற்றிய கட்டுரைகள், (7) தீண்டப்படாதோர் – தீண்டாமை : அரசியல் கட்டுரைகள், (8) இந்து மதத்தின் தத்துவம் இந்தியா – பொதுவுடைமைக்கான முன் தேவைகள், (9) பண்டைய இந்தியா: புரட்சி-எதிர்ப்புரட்சி - பகுதி 1 / பௌத்தத்தின் வீழ்ச்சி – சாதிகளின் தோற்றம் (10) பண்டைய இந்தியா: புரட்சி-எதிர்ப்புரட்சி- பகுதி 2 / இந்து மதத்தின் ஆதாரப் பகுதி சாதிதான், ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொரு தொகுதியும் ஏறக்குறைய 300 பக்கங்கள் அளவில் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் பதிப்பான இந்த பத்து தொகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய நாள் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.