தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சூது கவ்வும் - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சூது கவ்வும் - 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2025, 9:12 am

DIN

சூது கவ்வும் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் சூது கவ்வும் திரைப்படம் வெளியானது. இதில் சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு, டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்து உள்ளார். படத்தின் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சூது கவ்வும் - 2 திரைப்படம் பொங்கலையொட்டி, நாளை (ஜன. 14) ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.