தலித் மணமகனின் குதிரை ஊர்வலத்திற்கு 200 போலீஸார் பலத்த பாதுகாப்பு!

ராஜஸ்தானில் காவல் துறையின் பாதுகாப்பில் நடைபெற்ற தலித் மணமகனின் குதிரை ஊர்வல நிகழ்ச்சி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டத்தில் தலித் இளைஞரின் திருமணத்தின் குதிரை ஊர்வல நிகழ்ச்சி, காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பில் நடைபெற்றது.

அஜ்மர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரேகர் எனும் தலித் இளைஞரின் திருமண நிகழ்ச்சியில், மணமகன் குதிரையின் மீது அமர்ந்து மணமகளின் கிராமத்தை நோக்கி ஊர்வலமாக செல்லும் பாரம்பரிய ’பிந்தோலி’ நிகழ்ச்சியில் ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்து தாக்குதல் நடத்துவார்கள் என்று உறவினர்கள் அச்சப்பட்டனர்.

இந்நிலையில், அதற்கு பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டி தன்னார்வலர்களின் உதவியோடு மணமகளின் குடும்பத்தினர் அம்மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.21) மணமகன் விஜய் ரேகரின் குதிரை சவாரி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அதிகாரிகளினால் சுமார் 200 காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டனர். அவர்களது பாதுகாப்பில் மணமகளின் லவேரா கிராமத்தை நோக்கி எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி அந்த குதிரை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிக்க: 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியான விவகாரம்..ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

இதுகுறித்து அஜ்மர் மாவட்ட காவல் துறை அதிகாரி வந்தித்தா ராணா கூறுகையில், தலித் இளைஞரின் திருமண ஊர்வலத்தில் எந்தவொரு அசம்பாவித தாக்குதல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என அந்த கிராம மக்களுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும், அதில் கிராமவாசிகள் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களின் திருமண ஊர்வலங்களில் ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்திய சம்பவங்களினால் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியை நாடியதாக மணமகளின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அம்மாவட்டத்தின் பல காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இருப்பினும், அந்த ஊர்வலத்தின்போது வழக்கமாக வெடிக்கப்படும் பட்டாசுகளும் இசை கச்சேரிகளும் தவிர்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com