தாய்லாந்தின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தாய்லாந்து நாட்டின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
சோம்லக் கம்சிங்
சோம்லக் கம்சிங்
Published on
Updated on
1 min read

தாய்லாந்து நாட்டின் முதல் ஒலிம்பிக் நாயகனுக்கு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த சோம்லக் கம்சிங் (வயது 52) கடந்த 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஃபெதர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார். இதுவே அந்த நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்க பதக்கமாகும்.

அதன் பின்னர், அந்நாட்டின் ஒலிம்பிக் நாயகனாக கருதப்பட்ட அவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் கோன் கென் நகரத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகாரளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த புகாரை சோம்லக் தொடர்ந்து மறுத்துவந்தார்.

இதையும் படிக்க: ஆஸ்டின் நகரில் பொங்கல் விழா கோலாகலம்!

இந்நிலையில், சம்பவத்தன்று அந்த சிறுமியை அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் சோம்லக் சந்தித்தாகவும், அவருடன் தான் மறுநாள் காலை 3 மணி வரை அந்த சிறுமி இருந்ததையும் காவல் துறையினர் உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோன் கென் மாகாணத்தின் நீதிமன்றம் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சோம்லக் குற்றவாளியென அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது. மேலும், 5,000 டாலர்கள் (ரூ.4,32,307) அளவிலான பணத்தை இழப்பீடாக வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தாய்லாந்து நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கபதக்க நாயகனான சோம்லக் 1994 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் குத்துச் சண்டை பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com