தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய்
தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக...


தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கட்சியானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0 என்ற லிங்க்கை கிளிக் செய்யலாம்.
இதையும் படிக்க: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவுக்கு அழைப்பு!

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பனையூருக்கு வருகை தந்த விஜய் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...