பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவுக்கு அழைப்பு!

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு.

News image

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு

Updated On :24 ஜனவரி 2025, 10:43 am

DIN

குடியரசு நாளன்று ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

இந்நிலையில் குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் தவெக சார்பில் விஜய் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கட்சி மாநாட்டில் பேசிய விஜய், திமுகவுக்கும் பாஜகவுக்கும் எதிராகப் பேசினார்.

இந்த சூழ்நிலையில் அவர் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்வாரா இல்லை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த டிச. 30 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்முறையாக நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய், 'தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.