சென்னையின் 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக உருவாகும் பனகல் பூங்கா!

பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் தொடர்பாக...
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை. (கோப்புப்படம்)
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை. (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னையின் 2-வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் தயாராகி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் பனகல் பூங்கா பகுதியில் நடைபெற்று வருகின்றன. பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் அமைப்புக்கு உண்டான கட்டுமான பணிகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-ஆவது வழித்தடம் மாதவரம் பால் பண்ணை - சிப்காட் வரையிலும், 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பனகல் பூங்கா மெட்ரோ நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்தின் சிறப்பு அம்சங்கள்:

முதல்கட்டமாக பவர் ஹவுஸிலிருந்து பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையே அமையவுள்ள பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தி.நகர் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதி என்பதாலும் வர்த்தகம் அதிகம் நடைபெறும் பகுதியாக காணப்படுவதாலும் பனகல் பூங்கா நிலையத்துக்கு கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்தில் 6 நுழைவு மற்றும் 6 வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1000 பேர் ஒரே நேரத்தில் இருந்து பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ திட்டம் அமலுக்கு வந்தால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் மிகப்பெரிய மெட்ரோ நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்தப்படியாக பனகல் பூங்கா நிலையம் தயாராகி வருகிறது.

இத்திட்டப் பணிகள் வரும் 2027-க்குள் நிறைவடையும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com