புராரியில் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

வடக்கு தில்லியின் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
வடக்கு தில்லியின் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வடக்கு தில்லியின் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Published on
Updated on
1 min read

புது தில்லி: வடக்கு தில்லியின் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

ஆஸ்கா் பப்ளிக் பள்ளிக்கு அருகில் 200 சதுரடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட அந்த கட்டடம் திங்கள்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து தில்லி காவல்துறை மற்றும் தில்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

இடிபாடுகளில் சிக்கிய மூன்று உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. பலியானவர்களில் சாதனா (17), ராதிகா (7) ஆகிய இரு சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் அனில் குப்தா(42), எம்டி சர்ஃபராஸ்(22) மற்றும் எம்டி காதர்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்டவர்களில் படுகாயம் அடைந்துள்ள 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கட்டட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என போலீஸார் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com