மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4,000 கிலோ அளவிலான போதைப் பொருள்களை தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அழித்துள்ளனர்.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் இணை இயக்குநர் ரவீந்தர் சிங் பிஸ்ட் கூறியதாவது, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அதன் ஓர் பகுதியாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் போபால் நகர பிரிவினர் பறிமுதல் செய்த 1,000 கிலோ அளவிலான போதைப் பொருள்களை நேற்று (ஜன.28) அழித்துள்ளனர். அதன் மதிப்பு சுமார் ரூ.270 கோடி எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்ப்பிணிப் பெண்ணின் கருவிலுள்ள குழந்தைக்குள் வளர்ந்த கரு!
இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகர அதிகாரிகள் 3,000 கிலோ அளவிலான போதைப் பொருள்களை அழித்துள்ளதாகவும் அதன் மதிப்பு சுமார் ரூ.45 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 4000 கிலோ அளவிலான போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.315 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.