தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஈசிஆர் விடியோ: போலீசார் வழக்குப்பதிவு; 2 தனிப்படைகள் அமைப்பு!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2025, 10:36 am

DIN

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெண்கள் சென்ற காரை நடுரோட்டில் நிறுத்தி இளைஞர்கள் மிரட்டியதும், பெண்கள் காரை ரிவர்ஸில் எடுத்து வேகமாகச் சென்றனர். உடனே இளைஞர்களும் மற்றொரு காரில் சென்று பெண்களை அவர்கள் வீடு வரை துரத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் காரை நிறுத்தாமல் சென்றதால் இளைஞர்கள் துரத்திச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.