விபத்தின்போது மன்னிப்பு கேட்ட இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வாலிபர் சிறையில் அடைப்பு!
விபத்தின்போது மன்னிப்பு கேட்ட இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வாலிபர் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் நிலைதடுமாறி தனது இருசக்கர வாகனத்தில் வந்து மோதியதற்கு மன்னிப்புக் கேட்ட இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இருசக்கர வாகனத்தில் மோதியதற்கு மாணவி சிரித்துக் கொண்டே மன்னிப்பு கேட்டதால் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று முத்தம் கொடுத்துள்ளார்.
கோவையில் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம் பெண் தனது இருசக்கர வாகனத்தில் பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு சாலை குண்டும், குழியுமாக இருந்துள்ளது. அப்போது சாலையின் குழியில் இளம் பெண்ணின் இருசக்கர வாகனம் குழியில் ஏரி இறங்கியபோது நிலை தடுமாறி அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், அந்த வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றதாக தெரிகிறது.
உடனே அந்த வாலிபர் மோதலை மறந்து விட்டு,அந்த மாணவி தன்னிடம் சிரித்துதான் பேசுகிறாள் என்று நினைத்து இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் மாணவியின் வாகனத்தின் முன் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் அந்த இளம் பெண்ணிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென அந்த பெண்ணின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் சத்தமிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இது குறித்து அந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பெண்ணுக்கு முத்தம் கொடுத்தவர் கோவை புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது ஷெரீப் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்தது.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண் சம்பவம் நடந்த போது சிரித்தபடியே பேசியதால் அதை தவறாக எடுத்துக் கொண்ட அவர், பின் தொடர்ந்து சென்று பேசி முத்தமிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் முகமது ஷெரீப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையில் பட்டப்பகலில் நடுரோட்டில் இளம் பெண்ணுக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...