ரூ.42 லட்சம் போதைச் செடிகள் அழிப்பு!

ஒடிசாவில் ரூ.42 லட்சம் மதிப்பிலான ஓப்பியம் பண்ணை அழிக்கப்பட்டதைப் பற்றி...
சட்டவிரோதமாக 1 ஏக்கர் நிலத்தில் ரூ.42 லட்சம் மதிப்பிலான 2,100 ஓப்பியம் செடிகள் வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக 1 ஏக்கர் நிலத்தில் ரூ.42 லட்சம் மதிப்பிலான 2,100 ஓப்பியம் செடிகள் வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்பிலான ஓப்பியம் பண்ணை பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டது.

ஒடிசாவின் தாக்கூர்முண்டா காவல் துறையினர், வனத்துறை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து நடத்திய சோதனையில் மயூர்பஞ்சின் எதால்பெதா கிராமத்தின் அருகே சட்டவிரோதமாக 1 ஏக்கர் நிலத்தில் ரூ.42 லட்சம் மதிப்பிலான 2,100 ஓப்பியம் செடிகள் வளர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஓப்பியம் விற்பனையாளர்களுடன் இணைந்து இந்த ஓப்பியம் செடிகளை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கேரளம்: 2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

இதனைத் தொடர்ந்து, அந்த செடிகள் அனைத்தும் வேரோடு பிடுங்கப்பட்டு தாக்கூர்முண்டா தாசில்தாரின் முன்னிலையில் தீவைத்து கொளுத்தி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த மொத்த நடவடிக்கையும் சுமார் 4 மணிநேரம் நீடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒப்பியம் எனும் போதைச் செடியை வளர்த்தவர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருவதாகவும், இது போன்ற செயல்கள் மீண்டும் தொடராமல் இருக்க அதிகாரிகள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com