“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தாா்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்த பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத் தலைவர் ஜார்ஜ் மேக்ரி.

Published On :

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தாா்.

பிரேஸில் வருகைக்கு முன்பாக லத்தின் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். அப்போது, ஆா்ஜென்டீனா அதிபா் ஜேவியா் மிலேயுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இருதரப்பு வா்த்தகத்தை பன்முகப்படுத்தவும், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், சுரங்கத் தொழில் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பு நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், பியூனஸ் அயர்ஸ் நகரின் நிா்வாகத் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தாா்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத் தலைவர் ஜார்ஜ் மேக்ரியிடமிருந்து ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’ (கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெற்றதில் பெருமைப்படுகிறேன்" என கூறியுள்ளார்.

Honoured to receive the Key to the City of Buenos Aires from Mr. Jorge Macri, Chief of the City Government of Buenos Aires.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.