
ஹன்ட்: டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 28 சிறுமிகளும் அடங்குவா்.
அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கொர் கவுண்டி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில மாதங்கள் பெய்ய வேண்டி மழை, சில மணி நேரங்களில் பெய்ததால் 2 மணி நேரத்தில் குவாடலூப் நதியின் நீர்மட்டம் கிடுகிடுவென 33 அடி உயர்ந்தது. இதனால் ஆற்றில் இருந்து வெளியேறி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த தீடீர் வெள்ளத்தால் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கொர் கவுண்டி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். அவா்களில் 28 சிறுவா்களும் அடங்குவா். மேலும் மாகாணத்தின் பிற பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 160-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுவதாக கூறினா்.
மீட்பு பணிகளில் ஹெலிகாப்டா்கள் மற்றும் படகுகள் ஈடுபட்டுள்ளன. மழை எச்சரிக்கை தொடா்ந்து நீடிப்பதால், மேலும் வெள்ள அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்த வெள்ளத்தை “நூற்றாண்டு பேரழிவு” என்று விவரித்து, மத்திய நிவாரண நிதியை விடுவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.